Friday, 2024-04-19, 10:54 AM Welcome Guest

PARISTAMIL

Catégories de la section
Tamil News [16]
Notre sondage
உங்கள் கருத்து
Total of answers: 28
Forme d'entrée
Login:
Password:
Main » Articles » Tamil News » Tamil News

13 பிப்ரவரி 2009

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
முல்லைத்தீவில் 20 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மற்றுமொரு யுத்த சூனிய பிரதேசம் ஒன்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கரையோரத்தில் இருந்து 12 கிலோ மீற்றர் மேற்கு திசை வரையும், வடுக்காலில் இருந்து 112 கிலோ மீற்றர் வடக்கு திசையில் பழைய மத்தாளன் தெற்கு வரையான இந்த நிலப்பரப்பு இந்த யுத்த சூனிய பிரதேசத்திற்கு அடங்கும்.

அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள பாதுகாப்பு வலயமானது இராணுவ நலன்களை நோக்காக கொண்டுள்ளதாக போரியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரையோர பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்துள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் கடற்புலிகளின் செயல்பாடுகளை முடக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

ஏற்கனவே கடற்புலிகளின் பிரதான தமாக விளங்கிய சாலையை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் கடற்புலிகள் தமது படைக்கட்டுமானங்களை புதமத்தாளன் மற்றும் அம்பலவன் பொக்கணை வலையன் மடம் போன்ற பிரதேசங்களுக்கு மாற்றியுள்ளனர்.

தற்போது அரசாங்கம் அந்த பகுதிகளை பாதுகாப்பு வலயங்களாக அறிவத்துள்ளதன் மூலம் கடற் புலிகளின் தாக்குதல்களை தடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தில் கடற் புலிகளின் நடவடிக்கைள் இடம்பெறுமானால் அதனை அங்கு பிரசன்னமாகியிருக்கும் சர்வதேச செங்சிலுவை சங்க பிரதிநிதிகள் அவதானிக்க முடியும் என்பதோடு அதன் மூலம் புலிகளுக்கு சர்வதேச நெருக்கடியினையும் ஏற்படுத்தலாம் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இதேவேளை கடற்கரையோரங்களை நோக்கி பொதுமக்களை நகர்த்தி பின்னர் ஐநாசபை மற்றும் சர்வேதேச செஞ்சிலுவை சங்கம் ஆகிகயவற்றின் ஒத்துழைப்புடன் கப்பல் மூலமாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Category: Tamil News | Added by: dj-sasi94 (2009-02-13)
Views: 366 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Recherche
Amis du site
  • Créer un site
  • Jeux en ligne gratuits
  • Ton desktop en ligne
  • Ton Tutoriel vidéo
  • Copyright MyCorp © 2024 Hosted by uCoz